சமீபத்திய பதிவுகள்:


வேத மாணாக்கர் சபையார் கொண்டிருக்கிற கருத்துக்களில் சில:


கருத்து: இயேசு கடவுளல்ல, மத்தியஸ்தர் மட்டுமே, பிதாவினிடத்தில் மட்டுமே வேண்டிக்கொள்ள வேண்டும்.

விளக்கம்: இயேசு யார் என்று உணர்ந்துகொள்ள வழிகாட்டும் வசனங்கள்:

வெளி. 1:8        =   வெளி. 4:8
வெளி. 1:11       =   ஏசாயா 44:6, 48:11,12 
வெளி. 1:18       =   வெளி. 4:9,10,11
வெளி. 22:12      =   ஏசாயா 40:10
மீகா 5:1           =   சங்கீதம் 7:11
யோவான் 1:1,14    =   வெளி. 19:13,16
தானியேல் 7:9      =   தானியேல் 7:21
தானியேல் 7:13,14   =   தானியேல் 4:34, 6:26

யோவான் 8:32, I யோவான் 5:6, யோவான் 8:56
ஏசாயா 25:6-9
வெளி. 4:2, 5:12, 7:17, 21:5,6,7
யோவான் 5:21,22,23,26
I கொரிந்தியர் 1:9

இந்த வசனங்களையும் கவனியுங்கள்:
٭    யோவான் 8:26-29,32,36 இந்த வசனங்களில் பிதா,குமாரன்,பரிசுத்த ஆவி மூவருமே வருகிறார்கள். ஒன்றுக்கொன்று உள்ளத் தொடர்பை கவனியுங்கள்.
٭    இவை போதாது என்கிறவர்கள் சாமவேதம் கூறுவதை கவனியுங்கள். உத்ராக்ஷஹ காண்டம் 6ஆம் அதிகாரம், 7வது வாக்கியம்:
٭    உலகத்தை இரட்சிக்க இறைவன் பிதாவாகவும், குமாரனாகவும், பரிசுத்த ஆவியாகவும் வெளிப்பட்டு, வானத்துக்கும் பூமிக்கும் நடுவே உபத்திரவப்பட்டு சபையை இரட்சிப்பார்.

கருத்து:  I யோவான் 5:20-ல் இவரே மெய்யான தேவனும், நித்திய ஜீவனுமாயிருக்கிறார் என்று சொல்லப்பட்டுள்ளது பிதாவைக் குறிக்கும்.

விளக்கம்: இந்த வசனத்தில் நாம் சத்தியமுள்ளவரை அறிந்து கொள்வதற்கு என்று பிதாவையும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம் என்று இயேசுவையும் குறிப்பதற்கு சத்தியமுள்ளவர் என்ற ஒரே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதை கவனிக்கவும். இயேசு எப்படி பிதாவானவரை அறிக்கை செய்தாரோ அப்படியே அப்போஸ்தலர்களும் இயேசுவை அறிக்கை செய்தனர். அதன்படி இவரே மெய்யான தேவனும், நித்திய ஜீவனுமாக இருக்கிறார் என்பது இயேசுவையே குறிக்கும்.

I யோவான் 5:20 = I யோவான் 5:11 = யோவான் 3:16

மேலும் ஏசாயா 9:6ல் இயேசு நித்தியப்பிதா என்று குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்கவும்.

கருத்துபரிசுத்த ஆவி ஆள்தத்துவமல்ல.

விளக்கம்: யோவான் 4:24-ன்படி பிதாவானவர் ஆவியாயிருக்கிறார். ஆவியாயிருக்கிற பிதாவை ஆள்தத்துவத்தில் சேர்க்கும் பொழுது பரிசுத்த ஆவியை ஆள்தத்துவத்தில் சேர்க்காதது ஏன்? II கொரிந்தியர் 3:17-ல் கர்த்தரே ஆவியானவர் என்று சொல்லப்பட்டுள்ளதை கவனிக்கவும். கர்த்தர் ஆவியானவர் என்று சொல்லப்படவில்லை. கர்த்தரே ஆவியானவர் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்துகிற வசனங்கள்:

II சாமுவேல் 23:2
யோவான் 14:16,17,26
யோவான் 15:26, 16:7,8,13-16
எபேசியர் 4:30,   I பேதுரு 1:11
ரோமர் 8:26,27 = 8:34 = யோவான் 14:16 = 14:18,19 = 16:7

கருத்துஅபிஷேகம், தீர்க்கதரிசனம் எல்லாம் அப்போஸ்தலர்களோடு முடிந்து போயிற்று.

விளக்கம்: கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்பது தேவன் நமக்குத் தந்த வாக்குத்தத்தம். தேவன் கொடுத்ததை யாராலும் மாற்றவோ மறுதலிக்கவோ முடியாது.

அப். 2:38-40
அப். 10:44-47
அப். 19:1-6
I கொரிந்தியர் 14:1,3

கருத்துஅற்புதங்கள், அடையாளங்கள் தற்காலத்தில் நடப்பது இல்லை.

விளக்கம்: இதைப் புரிந்து கொள்ள ஒரு வசனம் போதும்.

யோவான் 14:12

கருத்துநரகம் என்று ஒன்று இல்லை.

விளக்கம்: உண்மைதான். நரகம் என்ற ஒன்றை தேவன் மனிதர்களுக்காக ஏற்படுத்தவில்லை. ஆனால், அது யாருக்காக ஏற்படுத்தப்பட்டது, யார் யார்,எதனால் அதில் பங்கடைவார்கள் என்று விளக்கும் வசனங்கள்:

மத்தேயு 25:41
மாற்கு 9:43,44
வெளி. 20:10, 21:8

கருத்துஇப்பொழுது பாடுகிறப் பாட்டுகளைப் பாடக் கூடாது, தேவனுக்குப் புதுப்பாட்டுதான் பாட வேண்டும்.

விளக்கம்: வெளி. 14:3-ல் அந்த பாட்டு (புதுப்பாட்டு) அந்த 1,44,000 பேரைத் தவிர வேறொருவரும் கற்றுக்கொள்ளக் கூடாதிருந்தது என்று சொல்லப்பட்டுள்ளதை கவனிக்கவும். எபேசியர் 5:19-ல் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம் பண்ணும்படி கூறப்பட்டுள்ளது. மேலும் பாடல்களின் மூலம் தேவன் மகிமைப்படுவார். தாவீது தேவனை மகிமைப்படுத்தினதெல்லாம் பாடல்களின் மூலம்தான். அவற்றின் மூலம் இயேசுவைக் குறித்ததானப் பல தீர்க்கதரிசனங்கள் வெளிப்பட்டன என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

கருத்து: காணிக்கைக் கொடுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது; வாங்கிக்கொள்ளுங்கள் என்று வேதத்தில் சொல்லப்படவில்லை ஆதலால், காணிக்கை வாங்கக் கூடாது.

விளக்கம்: காணிக்கை கொடுங்கள் என்று சொல்லும்பொழுதே வாங்கிக் கொள்ளுங்கள் என்ற கட்டளையும் உள்ளடங்கிவிடுகிறது. வாங்கிக் கொள்பவர்கள் இல்லாமல் கொடுக்க முடியாதே. இதை உணர்த்தும் வசனங்கள்:

I கொரிந்தியர் 9:14
கலாத்தியர் 6:6
ரோமர் 12:13

கருத்து: தசமபாகம் கொடுக்கக் கூடாது.

விளக்கம்: மோசேயின் நியாயப்பிரமாணத்தில் கட்டாயமாக்கப்பட்டிருந்த தசமபாகம் இயேசுவின் மரணத்திற்குப் பிறகு அது விருப்பக் காணிக்கையாக உள்ளது. நியாயப்பிரமாணத்தில் கூறப்பட்டிருந்த காரணத்தினால் தசமபாகம் கூடாதென்றால் நியாயப்பிரமாணத்தில் உள்ள மற்றக் கட்டளைகளான என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம் என்கிற அதி முக்கியமான முதலாம் கட்டளை முதற்கொண்டு எல்லாக் கட்டளைகளையும் விடவேண்டியதாயிருக்குமே.

கருத்துதேவனின் இரட்சிப்பின் திட்டம்.
   
விளக்கம்: அப்போஸ்தல நடபடிகள் 1:7

        இதற்கு விளக்கம் தேவையில்லை, பொருள் வெளியரங்கமாக உள்ளது
   
   வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது என்றும் எழுதியதற்கு மிஞ்சி எண்ண வேண்டாம் என்றும் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. வேதத்தில் உள்ளவற்றை உள்ளபடிப் புரிந்து கொள்ளாமல், மாற்றுக் கருத்துகளை உருவாக்கிக் கொண்டு நாமும் வழிவிலகி, மற்றவர்களையும் வழிவிலக செய்தோமானால், அது தேவக்கோபாக்கினைக்கு ஏதுவாகும். நம்முடைய ஊழியம் வேதத்தின் அடிப்படையில்தான் இருக்கவேண்டும். ஆனால், வேத வசனங்களை நாம் எப்படி புரிந்து கொண்டிருக்கிறோம் என்பது முக்கியம். அப்படி சரியான முறைமையின்படி புரிந்துகொள்ள தேவனுடைய உதவியைத்தான் நாம் நாடவேண்டும். Iயோவான் 2:20,27ல் கூறப்பட்டுள்ளதன்படி நாம் பரிசுத்தரின் அபிஷேகம் பெற்றுக் கொள்வோமானால் அந்த அபிஷேகம் நம்மை தேவனை நோக்கி சரியானபடி வழிநடத்தும். அப்பொழுது நாம் தேவன் கட்டளையிட்ட ஒரே வழியைவிட்டு விலகாதிருப்போம். மாறுபட்டு நடந்தோமானால் மாறுபாடு உள்ளவனுக்கு மாறுபடுகிறவராகவே தேவன் இருப்பார்.

Tags: Bible Lovers Assembly, Bible Lovers, Jesus, Holy Bible, Bible

வேத மாணாக்கர் சபை

புதன், 7 ஜனவரி, 2015
Posted by Vijaya Sankar N
இது உங்கள் விழிப்புணர்வுக்காகக் கொடுக்கப்பட்டுள்ள விஷயம். சிந்தித்து செயல்படுவீர்!
நம் வாழ்க்கையில் அநேகத் தேவைகள் இருக்கும். அவற்றை சந்திக்க நாம் உழைத்துத்தான் வருமானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நேர்வழியில்தான் பொருளை சம்பாதிக்க வேண்டும். கொலை செய்வது மட்டும்தான் பாவம் என்பது இல்லை. முறையற்ற வழியில் பணத்தை சம்பாதிப்பது அது ஒரு சிறு தொகை என்றாலும் பாவம்தான். நம் கடமையை செய்வதற்கு முறையில்லாத வழிகளில் நாம் பணம் பெற்றுக் கொண்டோமானால், ஏற்படும் விளைவுகள் என்னவென்றால்:
1)       நியாயமில்லாத ஒன்றையும் தேவன் விரும்ப மாட்டார், தான் படைத்தப் பிள்ளைகள் நேர்மையாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். எப்படியெனில், நம் பிள்ளைகள் நல்லவர்களாக இருக்கவேண்டும் என்று நாம் விரும்புவதைப் போல. நாம் நேர்மையாக இல்லையென்றால், தேவனுடைய அன்பைப் பெற முடியாது. தேவனுடைய அன்பு நமக்கு என்ன செய்யும்?
தேவனுடைய அன்பு நம்மை எல்லாத் தீயசக்திகளுக்கும் விலக்கிப் பாதுகாக்கும்.
தேவனுடைய அன்பு நம்மை நித்தமும் நேர்வழியில் நடத்தும்.
தேவனுடைய அன்பு நம் அனைத்துத் தேவைகளையும் சந்திக்கும்.
தேவனுடைய அன்பு நம்மை எல்லாப் பொல்லாப்புக்க்கும் விலக்கிக் காக்கும்.
தேவனுடைய அன்வு நம்மை வாழ்வில் உயர்த்தும், வழிநடத்தும்.
தேவனுடைய அன்பு நம்மை என்றும் சமாதானமாக வாழ வைக்கும்.
2)       நாம் நம் கடமையை செய்ய பணம் கேட்போமானால் நம் பிள்ளைகள் நமக்கு செய்ய வேண்டியக் கடமையை செய்ய நம்மிடத்திலேயே சொத்துக் கேட்கும். நாம் நேர்மையாக இல்லாத பட்சத்தில் நம் பிள்ளைகளிட்ட்த்தில் நாம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. அவர்களிடத்தில் அன்பு, பாசம், இரக்கம் எதுவும் இல்லாமல் போய்விடும். வயது முதிர்ந்த தளர்ந்த காலத்தில் நம் வாழ்க்கை எப்படியாக இருக்கும்?

3)       வசதிப் படைத்தவர்களால் பணம் கொடுத்துவிட முடியும். ஏழைகள் எங்கே செல்வார்கள்? எத்தனையோ எழைகள் பணமில்லாததினால் பணம் கொடுக்க வழியில்லாமல் தன் காரியங்களுக்காகப் பல ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இயலாமை கோபமாக மாறி, கோபம் சாபமாக மாறும் அல்லது மன வருத்தத்துடன் பணத்தைத் தரும் போது அது நமக்கு சாபமாக மாறும். ஏழைகளைத் துன்புறுத்தினால் அது எவ்விதத்திலாயினும் தேவன் அதைக் காண்பார். தேவகோபம் நம்மேல் வரும்.
தேவன் இந்த உலகத்தைப் படைக்கும்போது எல்லா ஜீவராசிகளையும் ஆண்டு கொள்ளும் அதிகாரத்தை மனிதனுக்குத் தந்தார். அப்படி ஆண்டு கொள்ள சொன்ன அந்த ஜீவராசிகளைக் கொடுமைப் படுத்தினால் அதன் கூக்குரல் தேவனின் காதில் எட்டும்போது அது நமக்கு சாபமாகும். இதை சிலர் வாழ்வில் பார்க்கிறோம். அப்படி மிருகஜீவங்களின் கூக்குரக்கே தேவன் பதிலளித்தாரென்றால், ஏழை மனிதனின் கூக்குரல் எவ்வளவாய் கேட்கப்படும்? நம் இருதயத்தில் தேன்றும் எண்ணங்களுக்கு தேவனிட்த்தில் நியாயத்தேர்ப்பு உண்டு என்று வேதம் சொல்கிறது. அப்படியானால், நம் செய்கைகள் எவ்வளவாய் நியாயந்தீர்க்கப்படும்?
கடமையை செய்வதற்குப் பணம் பெற்றுக் கொள்பவர்களின் வாழ்க்கையைப் பார்த்தோமானால் அவர்களுக்கு நிச்சயம் சமாதானம் இருக்காது. ஒரு தேவை பூர்த்தியானால், மற்றொரு தேவை எழும். இந்த தேவைகள் தொடர்கதையாகி எவ்வளவு சம்பாதித்தாலும் அது போதுமானதாக இராது. வாழ்க்கையில் கஷ்டங்கள், பிரச்சனைகள் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும். இது போல நம் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் இந்த மாதிரியான ஒரு தவறும், அதன் விளைவுகளும் காரணமாக இருக்கும். அதை நாம் கவனிக்கத் தவறுகிறோம்.
எத்தனையோ பெரிய பெரிய தவறுகள் செய்கிறவர்கள் நன்றாக வாழ்கிறார்களே என்று நாம் நினைக்கலாம். எல்லாவற்றையும் தேவன் கணக்கில் வைக்கிறார். தேவன் நீதியுள்ளவர். துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால் மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பை செய்யத் துணிகரம் கொண்டிருக்கிறது. சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும் என்று வேதம் சொல்கிறது.
இவற்றையெல்லாம் தவிர்க்க உண்மையான வாழ்க்கை வாழ தேவனை ஏற்றுக் கொள்வோமானா, தேவன் நம் தேவைகளை நேர்வழியில் சந்திப்பார். பரிசுத்தராக இருந்தும் நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்து நமக்கு மன்னிப்பைப் பெற்றுத்தந்த அன்புள்ளம் கொண்ட தேவனவர். இடை விசுவாசித்தோமனால், அந்த மன்னிப்பை நாம் பெற்றுக் கொண்டு வாழ்க்கையில் சமாதானமாக வாழ்வோம். மரணத்திற்குப் பின் நரகத்திற்கு செல்லாமல் தேவனிட்த்தில் சென்று சுகமாய் வாழ்வோம். இதுதான் சத்தியம். சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.

Tags: Bribe, wrong earnings

பரிதானம்

புதன், 25 ஜூன், 2014
Posted by Vijaya Sankar N