சமீபத்திய பதிவுகள்:
Archive for 2014
இது
உங்கள் விழிப்புணர்வுக்காகக் கொடுக்கப்பட்டுள்ள விஷயம்.
சிந்தித்து செயல்படுவீர்!
நம்
வாழ்க்கையில் அநேகத் தேவைகள் இருக்கும். அவற்றை
சந்திக்க நாம் உழைத்துத்தான் வருமானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நேர்வழியில்தான் பொருளை சம்பாதிக்க வேண்டும். கொலை செய்வது
மட்டும்தான் பாவம் என்பது இல்லை. முறையற்ற வழியில் பணத்தை சம்பாதிப்பது
அது ஒரு சிறு தொகை என்றாலும் பாவம்தான். நம் கடமையை செய்வதற்கு
முறையில்லாத வழிகளில் நாம் பணம் பெற்றுக் கொண்டோமானால், ஏற்படும்
விளைவுகள் என்னவென்றால்:
1)
நியாயமில்லாத ஒன்றையும்
தேவன் விரும்ப மாட்டார், தான் படைத்தப் பிள்ளைகள்
நேர்மையாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். எப்படியெனில்,
நம் பிள்ளைகள் நல்லவர்களாக இருக்கவேண்டும் என்று நாம் விரும்புவதைப்
போல. நாம் நேர்மையாக இல்லையென்றால், தேவனுடைய
அன்பைப் பெற முடியாது. தேவனுடைய அன்பு நமக்கு என்ன செய்யும்?
தேவனுடைய
அன்பு நம்மை எல்லாத் தீயசக்திகளுக்கும் விலக்கிப் பாதுகாக்கும்.
தேவனுடைய அன்பு நம்மை நித்தமும்
நேர்வழியில் நடத்தும்.
தேவனுடைய அன்பு நம் அனைத்துத் தேவைகளையும்
சந்திக்கும்.
தேவனுடைய
அன்பு நம்மை எல்லாப் பொல்லாப்புக்க்கும் விலக்கிக் காக்கும்.
தேவனுடைய
அன்வு நம்மை வாழ்வில் உயர்த்தும், வழிநடத்தும்.
தேவனுடைய
அன்பு நம்மை என்றும் சமாதானமாக வாழ வைக்கும்.
2)
நாம் நம் கடமையை செய்ய
பணம் கேட்போமானால் நம் பிள்ளைகள் நமக்கு செய்ய வேண்டியக் கடமையை செய்ய நம்மிடத்திலேயே
சொத்துக் கேட்கும். நாம் நேர்மையாக இல்லாத
பட்சத்தில் நம் பிள்ளைகளிட்ட்த்தில் நாம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. அவர்களிடத்தில் அன்பு, பாசம், இரக்கம்
எதுவும் இல்லாமல் போய்விடும். வயது முதிர்ந்த தளர்ந்த காலத்தில்
நம் வாழ்க்கை எப்படியாக இருக்கும்?
3)
வசதிப் படைத்தவர்களால்
பணம் கொடுத்துவிட முடியும். ஏழைகள் எங்கே செல்வார்கள்?
எத்தனையோ எழைகள் பணமில்லாததினால் பணம் கொடுக்க வழியில்லாமல் தன் காரியங்களுக்காகப்
பல ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இயலாமை கோபமாக
மாறி, கோபம் சாபமாக மாறும் அல்லது மன வருத்தத்துடன் பணத்தைத்
தரும் போது அது நமக்கு சாபமாக மாறும். ஏழைகளைத் துன்புறுத்தினால்
அது எவ்விதத்திலாயினும் தேவன் அதைக் காண்பார். தேவகோபம் நம்மேல்
வரும்.
தேவன்
இந்த உலகத்தைப் படைக்கும்போது எல்லா ஜீவராசிகளையும் ஆண்டு கொள்ளும் அதிகாரத்தை மனிதனுக்குத்
தந்தார்.
அப்படி ஆண்டு கொள்ள சொன்ன அந்த ஜீவராசிகளைக் கொடுமைப் படுத்தினால் அதன்
கூக்குரல் தேவனின் காதில் எட்டும்போது அது நமக்கு சாபமாகும். இதை சிலர் வாழ்வில் பார்க்கிறோம். அப்படி மிருகஜீவங்களின்
கூக்குரக்கே தேவன் பதிலளித்தாரென்றால், ஏழை மனிதனின் கூக்குரல்
எவ்வளவாய் கேட்கப்படும்? நம் இருதயத்தில் தேன்றும் எண்ணங்களுக்கு
தேவனிட்த்தில் நியாயத்தேர்ப்பு உண்டு என்று வேதம் சொல்கிறது. அப்படியானால், நம் செய்கைகள் எவ்வளவாய் நியாயந்தீர்க்கப்படும்?
கடமையை
செய்வதற்குப் பணம் பெற்றுக் கொள்பவர்களின் வாழ்க்கையைப் பார்த்தோமானால் அவர்களுக்கு
நிச்சயம் சமாதானம் இருக்காது. ஒரு தேவை பூர்த்தியானால்,
மற்றொரு தேவை எழும். இந்த தேவைகள் தொடர்கதையாகி
எவ்வளவு சம்பாதித்தாலும் அது போதுமானதாக இராது. வாழ்க்கையில்
கஷ்டங்கள், பிரச்சனைகள் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும்.
இது போல நம் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் இந்த மாதிரியான
ஒரு தவறும், அதன் விளைவுகளும் காரணமாக இருக்கும். அதை நாம் கவனிக்கத் தவறுகிறோம்.
எத்தனையோ
பெரிய பெரிய தவறுகள் செய்கிறவர்கள் நன்றாக வாழ்கிறார்களே என்று நாம் நினைக்கலாம்.
எல்லாவற்றையும் தேவன் கணக்கில் வைக்கிறார். தேவன்
நீதியுள்ளவர். துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால்
மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பை செய்யத் துணிகரம் கொண்டிருக்கிறது. சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு
முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும் என்று
வேதம் சொல்கிறது.
இவற்றையெல்லாம்
தவிர்க்க உண்மையான வாழ்க்கை வாழ தேவனை ஏற்றுக் கொள்வோமானா,
தேவன் நம் தேவைகளை நேர்வழியில் சந்திப்பார். பரிசுத்தராக
இருந்தும் நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்து நமக்கு மன்னிப்பைப் பெற்றுத்தந்த அன்புள்ளம்
கொண்ட தேவனவர். இடை விசுவாசித்தோமனால், அந்த மன்னிப்பை நாம் பெற்றுக் கொண்டு வாழ்க்கையில் சமாதானமாக வாழ்வோம்.
மரணத்திற்குப் பின் நரகத்திற்கு செல்லாமல் தேவனிட்த்தில் சென்று சுகமாய்
வாழ்வோம். இதுதான் சத்தியம். சத்தியத்தை
அறிந்து கொள்ளுங்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
Tags: Bribe, wrong earnings
இப்பூவுலகில் நம்முடைய வாழ்வானது, மரணத்தை நோக்கி 100,99,98,… என ஒவ்வொரு எண்ணாகக் குறைந்து வருவதற்கு ஒப்பாக இருக்கிறது என்று கூறலாம். இப்படி ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை குறைந்து குறைந்து… முடிவில் நாம் மரித்து நம் சரீரத்தைவிட்டுப் போகும்நாள் வரைக்கும் எண்ணப்படுகிறது. அதற்கு பிறகு என்ன?
நமது மரணத்திற்குப் பின்பு, நம் ஒவ்வொருவருடைய வாழ்வைக் குறித்ததானக் கணக்கை நாம் தேவனுக்கு முன்பாக ஒப்புவிக்கவேண்டுமென்று
பரிசுத்த வேதம் திட்டமும் தெளிவுமாய் கூறுகிறது. ‘இவ்வுலகில் வாழ்ந்த கோடானுக்கோடி மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் செய்த, பேசிய, சிந்தித்த ஒவ்வொன்றையும் தேவன் எப்படி பதிவுசெய்து வைக்கமுடியும்?’ என்று நாம் ஒரு கேள்விக் கேட்கலாம். யோசிக்க வேண்டியக் கேள்வியானாலும் இதற்கு ஆச்சரியமான பதிலுண்டு. ஆம், யோசனையில் பெரிய நம் தேவன், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஞாபகசக்தியிலே அவனுடைய அனைத்து நடவடிக்கைகளையும் வைத்திருக்கிறார்.
நம் ஒவ்வொருவருக்குள்ளும்
இருக்கும் இந்த ஞாபக சக்தி நாம் செய்கிற, பேசுகிற, நினைக்கிற ஒவ்வொன்றையும் அப்படியே பதிவு செய்கிற வீடியோ டேப் போன்றதாகும். ஒருவன் மரிக்கும்போது அவனது சரீரம் மண்ணுக்கு சென்றாலும், அவனது ஆத்துமாவானது விண்ணுலகம் செல்கிறது. உலக நியாயத்தீர்ப்பின் நாள் வரும்போது, தேவனுக்கு முன்பாக தனி மனிதனாய் நின்று தன் முழு வாழ்க்கையின் கணக்கையும் ஓப்புவிக்க வேண்டும். எப்படி? ஒவ்வொரு மனிதனுடைய முறை வரும்போதும் அவனுக்குள் இருக்கும் ஞாபக சக்தியின் வீடியோ டேப் அனைவரும் காணும்படியாகத் திரையிடப்படும். அதை மறுத்து எதுவும் சொல்லமுடியாது. உண்மையான உள்மனிதன் அன்று வெளிப்படுத்தப்படுவான்.
ஆயினும், நியாய்த்தீர்ப்பு நாளில் நம் தீய, பாவ செயல்கள் வெளியரங்கமாக்கப்படாமல்
அழிக்கப்பட ஒரே ஒரு வழியுண்டு. நம் பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டு, மரித்து மீண்டும் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் என்ற சத்தியத்தை விசுவாசித்து, நம் பாவங்களை ஒத்துக்கொண்டு, அவைகளை விட்டு மனந்திரும்பி தேவனிடத்தில் பாவ மன்னிப்புக் கேட்டால் அனைத்துப் பாவங்களும் நிரந்தரமாய் அழிக்கப்பட முடியும்.
நண்பனே! ‘வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை. வெளிக்குவராத மறைபொருளுமில்லை’ (மாற்கு 4:22) என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளதை நீ அறிவாயோ? ஆகவே, மனிதர்கள் உன்னை கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும் உன் செயல்கள் நல்லவைகளாகவே இருக்கட்டும். தேவனுடைய கண்களுக்கு மறைவானது ஒன்றுமில்லை அல்லவா? ஆம்! உன் இளமையைக் குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு,
நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு (Iதீமோத்தேயு 4:12). அப்போது, நியாயத்தீர்ப்பின் நாள் உனக்கு வெட்கத்திற்குரிய நாளாயிராது.
நன்றி:
சகோதரர்
சகரியா
(கிராம மிஷனெரி
இயக்கம்)
Tags: Last days, judging days, Bible Judgement day



